பாரத்சேனா சார்பாக மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் தமிழ்நாட்டில் ஹிந்தியை இலவச கட்டாய பாடமாக்க வலியுறுத்தப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- இந்தியா பல்வேறு துறைகளில் உலகிற்கு முன்னோடியாக சாதித்து தலைநிமிர்ந்து நிற்கிறது. நமது தாய் நாட்டிற்கும் மக்கள் பெருமை சேர்த்து வருகின்றன. இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு தாய்மொழி, ஒரு தனிப்பட்ட கலாச்சாரம், தனிப்பட்ட உணவு முறை, என பன்முக தன்மைகள் உண்டு. அனைவருடைய மனதிலும் தான் ஒரு இந்தியன் என்கிற பெருமிதமும் பெருமையும் உண்டு. 31 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்கள் பரந்து விரிந்து காணப்பட்டாலும் உலக அரங்கில் நாம் மொத்தம் 130 கோடி இந்தியர்கள் என்ற தனித்தன்மையோடு அடையாளம் கொள்கிறோம். இந்தியா என்றதும் ஹிந்து என்ற இன அடையாளமும் ஹிந்தி என்ற மொழி அடையாளம் தான் காலம் காலமாக நிலைத்து நிற்கிறது. அனைத்து மாநிலங்களிலும் பேசப்படும் ஹிந்தியை புறந்தள்ளுவது முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது. அறிவாற்றலையும் நமது திறமையையும் பரஸ்பரம் பகிர்ந்து முன்னேற ஹிந்தி மொழி கற்றல் மிகவும் உறுதுணையாக இருக்கும். எனவே ஹிந்தி மொழியை அனைத்து கல்வி நிலையங்களிலும் ஒரு கட்டாய இலவச பாடமாக்கி மக்களது வேற்று மொழி கற்கும் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமாய் பாரத் சேனா கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனு அளிக்கும் போது முருகனடிமை பாஸ்கர் ஆனந்த் ஆசாமிகள். மாநில பொருளாளர் செல்வராஜ். மாநில மகளிரணி தலைவி வீர தமிழச்சி சரஸ்வதி. கோவை மாவட்ட தலைவர் பீமா பாண்டி உட்பட பலர் இருந்தனர்.